இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ஜேடியு தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் பாஜக உடன் கை கோர்த்துள்ளார். இன்று அங்கே இரு கட்சிகள் இணைந்து நடத்திய நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பீகார் முதல்வரும் ஜேடியு கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் பேசியபோது “வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடிக்காகவே பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் பாஜக நிச்சயம் 4000 தொகுதிகளில் வெல்லும்” என்றார்.
நாட்டில் மொத்தமே 543 லோக்சபா தொகுதிகள் தான் இருக்கும் நிலையில், அதில் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதை பாஜக தனது டார்கெட்டாக வைத்துள்ளது. 400 என்று சொல்ல வந்த நிதிஷ்குமார் தான் 4000 எம்பிக்கள் என உளறிக் கொட்டி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.