மக்களை பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான தீர்ப்பு – மு.க ஸ்டாலின் பதிவு

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வந்தது . உத்தர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில், பாஜக கூட்டணியை விட இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. திமுகவின் இந்த வெற்றியை கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெள்ளியிட்டுள்ளார்.

அதில் பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து இந்தியா கூட்டணி பெற்றுள்ள வெற்றி மகத்தானது; வரலாற்றுச் சிறப்புமிக்கது!

அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான மக்கள்தீர்ப்புக்கு நன்றி!

இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News