நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது.
அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதியான இன்றுடன் நிறைவடைவதால் அந்த 2 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது.
Also Read : அருணாச்சலபிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக!
அதன்படி சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் எஸ்கேஎம் கட்சி 31 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக ஒரு இடத்தை கூட கைப்பற்றமால் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஆட்சி அமைக்க தேவையான இடங்களை காட்டிலும் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் எஸ்கேஎம் கட்சி சிக்கிமில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.