உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் மனுதாக்கல் செய்ய கடைசி நாளன இன்று ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுதாக்கலின்போது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் உடனிருந்தனர்.