ஒரு மணி நேர நிலவரம்! பதிவான வாக்குகள் எத்தனை?

தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை, பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 1 மணி நேர நிலவரப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும், புதுச்சேரியில் பகல் 1 மணி நேர நிலவரப்படி, 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக தருமபுரியில் 44.08 சதவீதம் வாக்குகளும்,
குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில், 32 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

மேலும், விளவங்கோடு இடைத்தேர்தலில், 35.14 சதவீத வாக்குகள் ஒரு மணி நேர நிலவரப்படி பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News