மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று (ஏப்.14) வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில், மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்நிகழ்வில் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பாஜக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
2025 ஆம் ஆண்டு பழங்குடியினரின் பெருமையை பசைசாற்றும் ஆண்டாக கடைபிடிக்கப்படும்.
ஒரே நாடு , ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் – பொதுவான வாக்காளர் பட்டியல் முறை அறிமுகம் செய்யப்படும்.
மேலும் 5 ஆண்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
சூரிய ஒளி மூலம் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் முத்ரா கடன் திட்டத்தின் தொகை உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
வேலை வாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
கிராமங்களில் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்படும்.
இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதாரா நாடாக மாற்றுவோம்.
நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் திருநங்கைகளும் சேர்க்கப்பட்டு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் தொடர்ந்து செயல்படும்.
பெண்களுக்கு சுகாதார பாதிப்பை உறுதிப்படுத்த ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
ஏழைகளுக்கு தரமான வீடுகள் கட்டி தரப்படும்.