ராமநாதபுரத்தில் ‘பஜ்ஜி’ சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இன்று பிரசாரத்திற்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயலில் உள்ள டீக்கடைக்கு சென்று பஜ்ஜி சுட ஆரம்பித்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள், நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் கடை முன்பு குவிந்தனர்.

தான் ஆரம்ப காலத்தில் பெரியகுளத்தில் டீக்கடை நடத்தி வந்ததை குறிப்பிட்டு, பழையதை என்றும் மறக்கவில்லை என்று கூறினார். தனக்கு பலாப்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

Recent News