ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினமே விளவங்கோடு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் மார்ச் 20-ஆம் தொடங்கும் வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 27-ம் தேதி கடைசி என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.