இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, தற்போது வரை தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. இதில், NDA கூட்டணி 177 இடங்களில் முன்னிலையிலும், 117 இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கின்றன.
இதில், இண்டியா கூட்டணி 182 தொகுதிகளில் முன்னிலையும், 49 தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. மற்றவைகளை பொறுத்தவரை, 14 இடங்களில் முன்னிலையும், 4 இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாத மாநிலங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்…
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், 40 தொகுதிகளிலும் திமுகவின் கூட்டணி தான் முன்னிலை வகித்திருக்கிறது. அதனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
- பஞ்சாப் – 13 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், பாஜக ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை. அந்த மாநிலத்தில், இண்டியா கூட்டணி 10 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
- மனிப்பூர் – 2 தொகுதிகள் கொண்ட மனிப்பூர் தொகுதியில், 2 தொகுதியிலும் இண்டியா கூட்டணி தான் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக அங்கும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
- மேகாலயா – 2 தொகுதிகள் கொண்ட மேகாலயா மாநிலத்தில், ஒன்றில் இண்டியா கூட்டணியும், 1-ல் மற்றவையும் முன்னிலை பெற்றிருக்கிறது.
- சண்டிகர் – ஒரு மக்களவை தொகுதிகள் கொண்ட சண்டிகரில், இண்டியா கூட்டணி தான் அந்த இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக அங்கும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
- லடாக் – ஒரு மக்களவை தொகுதிகள் கொண்ட லடாக்கில், இண்டியா கூட்டணியும், பாஜக கூட்டணியும், ஒரு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கவில்லை. மற்றவை தான் முன்னிலை வகித்து வருகிறது.
- லட்சத்தீவு – ஒரு மக்களவை தொகுதிகள் கொண்ட லட்சத்தீவில், இண்டியா கூட்டணி தான் முன்னிலை வகிக்கிறது.
- மிசோரம் – ஒரு மக்களவை தொகுதிகள் கொண்ட மிசோரமில், மற்றவை தான் முன்னிலையில் உள்ளது.
- நாகலாந்து – ஒரு மக்களவை தொகுதிகள் கொண்ட நாகலாந்தில், இண்டியா கூட்டணி தான் அந்த இடத்தை கைப்பற்றி இருக்கிறது.
மேற்கண்ட இடங்களில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதில், பெரும்பாலும் ஒரே தொகுதிகள் மட்டுமே கொண்ட Union பிரதேசங்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.