2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்வதற்காக இன்று இரவு நட்டா திருச்சி வரவுள்ளார்.
திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
பேரணி நடத்த அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமான பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் வாகனப் பேரணிக்கு அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.