கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வயதான சீக்கியர் ஒருவர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் கத்தியுடன் வந்துள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். கத்தியுடன் வந்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.