ராமநாதபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவரது பெயர் கொண்ட மேலும் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இவர் நேற்று (மார்ச்.25) தனது ஆதரவாளர்களுடன் ராதநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரை சந்தித்து போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதற்கிடையே மதுரை மாவட்ட உசிலம்பட்டி அருகேயுள்ள மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் என்பவரும் சுயேச்சையாக மனுதாக்கல் செய்தார்.
மேலும், காட்டூரை சேர்ந்த ஒய்யாரம் என்பவரது மகன் பன்னீர்செல்வம், வாகைகுளம் கிராமம் ஒச்சாத்தேவர் என்பவரின் மகன் பன்னீர்செல்வம், சோலை அழகுபுரம் ஒய்யாத்தேவர் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் ஆகியோரும் இன்று (மார்ச்) வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் சுயேச்சையாக களம் காண்பதால், ஓபிஎஸ்-க்கு கிடைக்கும் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.