தலைக்கேறிய மது போதை…பட்டாக்கத்தியுடன் அட்டகாசம் செய்யும் புள்ளிங்கோ

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் குடிபோதையில் இளைஞர்கள், மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சென்னை மாத்தூர் எம்எம்டிஏ மூன்றாவது தெருவில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். அங்கு சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவை சேதப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த வீட்டின் ஜன்னல்களை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த ரகளையில் ஈடுபட்ட நபர்களை மர்ம நபர்களை அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News