கொரோனா தாக்கம்.. பல மாதங்களுக்கு பின் உயிரிழந்த இளம்பெண்.. 2 குழந்தைகளும் பலி.. இதுதான் நடந்தது?

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கம், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு நடந்துக் கொண்டிருக்க, மறு பக்கம், கொரோனா ஊரடங்கால், பொருளாதார பாதிப்பும் நடந்துக் கொண்டிருந்தது.

இந்த தாக்கத்தால், இன்றும் பல்வேறு குடும்பங்கள், பொருளாதார நிலையை மீட்டெடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படியான சம்பவம் ஒன்று, திருச்சி மாவட்டத்திலும் தற்போது நடந்துள்ளது. அதாவது, திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார்.

33 வயதாகும் இவருக்கு, ஷோபனா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மனோஜ் குமார், சொந்தமாக பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளார். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்த தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது கடையை இழுத்து மூடிய அவர், வேறொரு பர்னிச்சர் கடையில், ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், பணி காரணமாக, கொடைக்கானல் சென்ற மனோஜ்குமார், நேற்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் மனைவி ஷோபனா திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து, கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.

அப்போது, மனைவி ஷோபனாவும், இரண்டு ஆண் குழந்தைகளும், தூக்கில் சடலமாக கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கதறி அழுதுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அவர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தொழிலில் நஷ்டம் அடைந்த பிறகு, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது என்பதும், இதனால், கடந்த சில நாட்களாகவே, ஷோபனா மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், தெரியவந்துள்ளது. எனவே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தைகளை கொன்றுவிட்டு, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News