சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம் பெண் மர்மான முறையில் இறந்து கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை காத்திருப்பு அறைக்கு செல்லும் பாதையில் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பென்சில் துப்பட்டா மூலம் கழுத்தை இறுக்கிய நிலையில் இளம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயில்வே காவல்துறையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மர்மமான முறையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வு மேற்கொள்ள சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் பெண் குறித்த எந்த அடையாளமும் தற்போது வரை தெரிய வராத காரணத்தினால் முதல் தளத்திலுள்ள காத்திருப்போர் அறைக்கு இளம் பெண் எவ்வாறு வந்தார் அவருடன் வேறு யாரேனும் வந்தார்களா சிசிடிவி காட்சிகள் மூலமாக இளம்பெண் உயிரிழந்தது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் முறையில் உயிரிழந்திருக்கிறாரா என காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.