எம்ஜிஆர் நகர் சாலையில் போதை மாத்திரை விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் இளம் பெண் போதை மாத்திரை விற்பனை செய்வதாக வந்த தகவல் என அடிப்படையில் எம்ஜிஆர் நகர் டாட்டா உடுப்பி ஹோட்டல் அருகே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் சரிதா என்ற பெண்ணை சோதனை செய்தபோது 200 மாத்திரைகள் கொண்ட 20 போதை மாத்திரை அட்டைகளை பறிமுதல் செய்து சரிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.