நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதே சமயம், கள்ளக்குறிச்சி துயரத்தை கருத்தில் கொண்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் நிர்வாகிகள் ஏற்பாட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், கையில் தீவைத்து, ஓடுகளை உடைக்கும் சாகச நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவர் பங்கேற்றார். அப்போது, பெட்ரோல் கை முழுவதும் பரவி தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதை அணைக்க முயன்ற மற்றொருவர் கையிலும் தீப்பற்றியது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.