திருமணம் ஆன 20 நாட்களில் இளம்பெண் தற்கொலை.. கசந்தது காதல்.. காதல் கணவனால் நடந்த கொடூரம்..

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். 20 வயதாகும் இவர், தனியார் கல்லூரி ஒன்றில், இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரும், அதே கல்லூரியில் படித்து வந்த ரமணி என்ற இளம்பெண்ணும், காதலித்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த பெண் வீட்டார், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த மே மாதம் 6-ஆம் தேதி அன்று, வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அதன்பிறகு, தனியாக வீடு எடுத்து, இருவரும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி அன்று, இளம்பெண் ரமணி, சாணி பவுடர் குடித்து, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய ரமணியின் தந்தை, காவல்துறையில் புகார் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், சஞ்சயிடம் விசாரணை நடத்தினர்.

அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, திருமணத்திற்கு பிறகு, கல்லூரியில் படிக்கும் இன்னொரு பெண்ணிடம், சஞ்சய் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே, கடந்த சில தினங்களாக, தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்றும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த அவர், ரமணியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், தற்கொலை செய்துக் கொண்டது போல், நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்சயையும், அவரது தாய் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

RELATED ARTICLES

Recent News