இளம்பெண் சேலம் அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாரமங்கலம் துட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன்(22) குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை காப்பாற்ற முடியாது என்று அவரது மனைவி மேகலா(21) இடம் மருத்துவர் கூறியதால், மனம் உடைந்த மேகலா அரசு மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகலாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதில் ஈடுபட்டனர்.