கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் திடல்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கோவையில் உலகத்தரத்தில் கிரிக்கெட் திடல் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் அவர் தனது பக்கத்தில் தெரிவித்ததாவது:

“கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஆர்வலராக, எங்கள் 2024 தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன்.

கோவையில், உலகத்தரத்திலான கிரிக்கெட் திடல், அங்கு உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவோடு அமைக்கப்படும்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டதைப் போல, சென்னை எம்.ஏ. சிதம்பரம் திடலை அடுத்து, தமிழ்நாட்டின் இரண்டாவது பன்னாட்டு கிரிக்கெட் மைதானமாக இது விளங்கும்.

நமது திராவிட மாடல் அரசும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் திறமையாளர்களை வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டின் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News