வீட்டு வேலை செய்யும் இடத்தில் சிறுக சிறுக 90 சவரன் வரை திருடிய பணி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் வசித்து வருபவர் மருத்துவர் பங்கஜ்குமார் இவருடைய வீட்டில் சில ஆண்டுகளாக விஜயலட்சுமி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் விக்னேஷ் ஆகிய இரண்டு பேரும் சிறுக சிறுக 90 சவரன் நகைகளை மருத்துவர் வீட்டில் இருந்து திருடி உள்ளனர்.
தகவல் அறிந்த மருத்துவர் பங்கஜ்குமார் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பணிப்பெண் விஜயலட்சுமி அவரது கணவர் விக்னேஷ் மற்றும் உறவினர் வருண் குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.