உத்தரப்பிரதேசத்தில் மணமகனே இல்லாமல் திருமணம் நடைபெற்ற சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சரின் திருமண உதவித்திட்டத்தின்கீழ் 500க்கும் மேற்பட்டோருக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனே இல்லாமல் சில பெண்கள் தனக்குத்தானே மாலை மாற்றிக்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் ஏற்கனவே திருமணமான தம்பதிகள், சகோதர – சகோதரிகள் உள்ளிட்டோரும் இருந்துள்ளனர். திருமண உதவித்திட்டத்தின்கீழ் கிடைக்கும் ₹35,000 நிதி உதவி மற்றும் சீர்வரிசை பொருட்களை பெறுவதற்காக இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.