டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் மெட்ராஸ் காபி ஹவுஸ் என்ற பெயரில் பிரபல உணவு விடுதி ஒன்று உள்ளது. அங்கு இஷானி என்ற பெண் தனது நண்பருடன் தோசை சாப்பிட சென்றுள்ளார். அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்கள் ஆர்டர் செய்த தோசையை சாப்பிட்ட அவருக்கு ஏதோ உணர்வு ஏற்பட்டது. அந்த தோசையில் பல இடங்களில் கரப்பான் பூச்சிகள் இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து ஹோட்டலை கடுமையாக விமர்சித்துள்ள நெட்டிசன்கள் ‘ஹோட்டல் உரிமத்தை ரத்து செய்யவேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.