அளவுக்கு அதிகமான போதை: நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் உயிரிழப்பு!

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அனு சத்யா (31) இவரது அம்மா பிரேமாவின் பிறந்தநாளை கானாத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கொண்டாடியுள்ளனர்.

அப்போது அனு சத்யாவும் அவரது தோழி சைலஜாவும் (29) அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது இருவரும் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்த அனுசத்யாவின் தாய் பிரேமா, கூச்சல் போடவே அங்கு பணியில் இருந்த காவலாளி விஜய் நீச்சல் குளத்தில் குதித்து அனுசத்யாவையும் சைலஜாவையும் மீட்டார் ஆனால் அனுசத்யா மட்டும் இறந்துள்ளார்.

சைலஜாவுக்கு ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனார்.

இச்சம்பவம் தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News