மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது ஷேர் ஆட்டோவில் மனைவி மீனாவை ஏற்றிக்கொண்டு தனது சொந்த வேலையாக சென்றுள்ளார். அப்போது ஆட்டோ சுந்தரம் பார்க் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பியுள்ளார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆட்டோவில் இருந்த ஆறுமுகத்தின் மனைவி மீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது சம்பந்தமாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மீனாவின் மகன் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியுடன் ஷேர் ஆட்டோவில் சென்ற போது விபத்துக்குள்ளாகி கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.