சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் ரயில் பயணிகளிடம் சோதனைகள் ஈடுபட்டிருந்த பொழுது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை சோதனை செய்ததில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புல்புலி பிவி என்கின்ற பெண்ணிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் கைது செய்தனர்.
இதையடுத்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், மேற்கு வங்கத்தில் கூலி வேலை செய்து வந்ததாகவும், போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வந்ததாகவும், தங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா வாங்கிக்கொண்டு சென்னையில் தங்கி வேலை செய்யும் வட மாநிலத்தவர்களிடம் விற்றால் நன்றாக வருமானம் கிடைக்கும் எனக் கூறியதன் பேரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.