பெண்களின் மீதான சைபர் க்ரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த குற்றங்களை தடுக்க அரசு தரப்பிலும், பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.
இந்நிலையில், சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 60 மாணவிகளின் குளியல் வீடியோக்கள், இணையதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, அதிர்ச்சி அடைந்த மாணவிகள் சிலர், பல்கலைக்கழக விடுதியிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
மேலும், மற்ற மாணவிகள், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதே பல்கலைக்கழகத்தில் MBA முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி தான், இந்த வீடியோக்களை எடுத்து, தனது காதலருக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.