அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று, ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்தனர்.
ஆனால், அறிவிப்பு வெளியாகி, பல மாதங்கள் ஆகியும், சிறு அப்டேட்டை கூட வெளியிடாமல், ரசிகர்கள் பொறுமையை படக்குழு பெருமளவில் சோதித்தது.
இந்த சோதனைகளுக்கு பிரதிபலனாக, தற்போது மிகப்பெரிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது என்று, தகவல் கசிந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.