மஹாராஷ்டிர மாநிலம் புனேயின் வனாவ்டி பகுதியை சேர்ந்தவர் நிகில் கண்ணா. இவருக்கும் ரேணுகா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு துபாய் அழைத்துச் செல்லும்படி ரேணுகா, கணவர் நிகிலிடம் கூறியுள்ளார். அனால் நிகில் மறுத்துள்ளார். மேலும் ரேணுகாவின் பிறந்தநாளுக்கு எந்த விலை உயர்ந்த பரிசு பொருட்களையும் நிகில் வழங்கவில்லை.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டை முற்றிய நிலையில், ரேணுகா, நிகில் மூக்கில் ஓங்கி குத்தியுள்ளார். அதில், பற்கள் உடைந்ததோடு மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறி நிகில் கண்ணா மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனை அழைத்து செல்லும் வழியிலேயே நிகில் கண்ணா உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரேணுகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.