ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். 35 வயதாகும் இவருக்கு, ஷிவானி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இந்த பெண்ணுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த கார் டிரைவர் ராமாராவ் என்பவருக்கும் இடையே, கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில், இருவரும் சந்தித்து, உல்லாசமாக இருந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் மூலம் இதனை தெரிந்துக் கொண்ட ரமேஷ், இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இருப்பினும், அடங்காத இருவரும், தொடர்ந்து, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல், ரமேஷ் உயிருடன் இருந்தால், காதலை தொடர முடியாது என்பதை அறிந்த இரண்டு பேரும், அவரை கொலை செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி, கடந்த 1-ஆம் தேதி அன்று, பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய ரமேஷ்-க்கு, அவரது மனைவி ஷிவானி மது ஊற்றிக் கொடுத்துள்ளார். அதனை அருந்திய பிறகு, போதை தலைக்கேரிய ரமேஷ், படுக்கைக்கு உறங்க சென்றுள்ளார்.
அவரையே பின்தொடர்ந்து சென்ற ஷிவானி, தலையனையை எடுத்து, தலையைில் அழுத்தி, மூச்சு திணற வைத்து, கொலை செய்துள்ளார்.
பின்னர், அடுத்த நாள் மாரடைப்பு ஏற்பட்டு, கணவர் உயிரிழந்துவிட்டதாக, நாடகமாடிய ஷிவானி, காவல்துறையின் விசாரணைக்கு பிறகு, உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 3 பேரை கைது செய்துள்ளனர்.