ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் இன்று (செப்.17) காலை 11 மணியளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகின்றது.
அதன் பிறகு டெல்லி துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சமர்ப்பிக்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி காலல் கொள்கை ‘ஊழல்’ வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு திகார் சிறையில் இருந்த அவரை உச்சநீதிமன்றம் அந்த வழக்கில் ஜூலையில் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, சிபிஐ தொடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவரை செப்டம்பர் 13-ஆம் தேதி ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து, செப்டம்பர் 15-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், நான் இரு தினங்களில் முதல் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.