இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சேப்டர் 1, மெரி கிறிஸ்மஸ் ஆகிய 4 படங்கள் திரையரங்குகளில் வெளியானது.
இந்த நான்கு படங்களில், 2 படங்களுக்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும், அயலான் திரைப்படம் 27 கோடி ரூபாயை இதுவரை வசூலித்துள்ளது.
ஆனால், கேப்டன் மில்லர் திரைப்படம், உலகம் முழுவதும் 37 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இதன்மூலம், இந்த பொங்கல் வின்னர் தனுஷ் என்பது தெரியவந்துள்ளது.