வங்க மொழியில் பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ஐந்த்ரிலா ஷர்மா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தனது தன்னம்பிக்கையின் காரணமாக, அதில் இருந்து மீண்டு வந்தார்.
ஆனால், சமீபத்தில் அவருக்கு மூளை பக்கவாத நோய் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்காரணமாக, அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்து, உடல்நிலை தேறிய நிலையில், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார்.
2 முறை புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த ஐந்த்ரிலா ஷர்மா, தற்போது உயிரிழந்துள்ளது பலரையும் சோகம் அடைய வைத்துள்ளது.