தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான அரசியல் தலைவர்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம், தேனியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருவதாக கூறிய பிரதமருக்கு உண்மையான அக்கறை இருந்தால் மிக்ஜாம் புயல், தூத்துக்குடி வெள்ளத்தின் போது ஏன் வரவில்லை.
பாஜக அரசு எல்லா உரிமைகளை பறிக்க பார்க்கின்றனர். புதிய கல்விக்கொள்கை மூலம் தமிழை அழித்துவிட்டு சமஸ்கிருதம், ஹிந்தி மொழியை திணிக்க பார்க்கின்றனர். நாடு முழுவதும் நீட் தேர்வு அமலுக்கு வந்தாலும், தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் தேர்வு நுழையவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு இந்த அதிமுக அடிமைகள் பாஜகவின் பேச்சை நீட் தேர்வை கொண்டு வந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ள வரிப்பணம் ஆறரை லட்சம் கோடி. ஆனா தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுத்தது வெறும் ஒன்றரை லட்சம் கோடி. அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் 1 ரூபாய் கொடுத்தால் அவர்கள் வெறும் 28 பைசா மட்டுமே திருப்பி தருகின்றனர். இனிமே நரேந்திர மோடி அவர்களின் பெயரை நான் சொல்ல மாட்டேன்.. இனி பிரதமர் மோடியை திரு.28 பைசா என்று தான் கூப்பிட வேண்டும்.” என்று தெரிவித்தார்.