2024-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி, பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த சர்வதேச தொடரில், ஈட்டி எரிதல் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், கடந்த முறை தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு வெள்ளி வென்றார்.
மேலும், பாகிஸ்தானிய வீரர் அர்ஷத் நதீம், 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து, தங்கப்பதக்கத்தை வென்றார். இவர் தங்கம் வென்ற பிறகு, ஊக்க மருந்து எடுத்தாரா? இல்லையா? என்ற பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதனை அறிந்த நெட்டிசன்கள் சிலர், “ஆம்.. அவர் முகத்தை பார்க்கும்போது, ஊக்க மருந்து எடுத்துக் கொண்டவர் போல் தான் உள்ளது” என்று, தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பேசி வருகிறார்கள். மேலும், அது உண்மை என்பது கண்டறியப்பட்டால், நீரஜ் சோப்ராவுக்கு தங்கப்பதக்கம் கொடுக்க வேண்டும் என்றும், கூறி வருகின்றனர்.
ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம். அதாவது, ஒலிம்பிக் தொடர்களில் கலந்துக் கொள்ளும் வீரர்கள், முதல் 3 இடங்களை பிடித்த பிறகு, அவர்களுக்கு ஊக்க மருந்துக்கான பரிசோதனை நடத்தப்படும்.
அவ்வாறு வழக்கமாக நடத்தப்படும் சோதனையின் அடிப்படையில் தான், அர்ஷத் நதீமுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், வெள்ளி வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கும், வெண்கல பதக்கம் வென்ற கிரனெடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ்-க்கும், ஊக்க மருந்துக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மற்றப்படி, அவர்கள் மீது எழுந்த சந்தேகத்தின் விளைவாக, இந்த மருத்துவ பரிசோதனை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.