மதிய உணவு சாப்பிட்ட, 16 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையின் கோவாண்டி பகுதியில் உள்ள பிரிஹன் மும்பை மாநகராட்சியின் அனிக் காவ் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவு விஷமாகியதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 9 சிறுவர்களும், 7 சிறுமிகளும் அடங்கும். தற்போது மாணவர்களில் உடல்நிலை சீராக உள்ளதாக தெரியவந்துள்ளது.