மணிப்பூர் மாநிலத்தில் வாக்குச்சாவடிகள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் உள்ள மொய்ராங் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடி அருகே மர்ம நபர்கள் பல ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.