ஓசூர் அருகே விவசாயிடம் 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (38) என்பவர் சிட்டாவில் பெயர் மாற்றுவதற்காக கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்துள்ளார்.
இது சம்பந்தமாக எந்த வேலையும் நடைபெறாததால் வெங்கடேசன் சந்தனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன் (53) என்பவரிடம் சென்றுள்ளார். சிட்டாவில் பெயர் மாற்றம் செய்ய அவர் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து விவசாயி வெங்கடேசன் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன் பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள கணினி மையத்தில் வெங்கடேசன் கிராம நிர்வாக அலுவலரிடம் ரசாயணம் தடவிய 4 ஆயிரம ரூபாய் கொடுக்கும்போது கையும் களவுமாக பிடித்துள்ளனர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.