தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். என்ன தான் நிறைய திறமை இருந்தும், பெரிய ஹிட் கொடுக்க முடியாமல், திணறி வருகிறார்.
தற்போது, இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில், தங்கலான் என்ற படத்தில், விக்ரம் நடித்து வருகிறார். இந்த படம் வெற்றிப் பெற்றால் தான், விக்ரம் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தங்கலான் ஷீட்டிங் ஸ்பாட்டில், ரசிகர் ஒருவருடன் விக்ரம் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம சீயான் விக்ரமா இது? என்று கேட்டு வருகின்றனர்.