மீண்டும் விஜயின் ப்ளாக் பஸ்டர் படம் ரீ ரிலீஸ்?

தளபதி விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்திற்கு பிறகு, சினிமாவில் இருந்து விலகும் விஜய், முழு நேர அரசியலில் களமிறங்க உள்ளார். இதன்காரணமாக, இவரது பழைய திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்வதற்கு, தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது விஜயின் துப்பாக்கி திரைப்படம், திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

இதற்கு முன்பு, விஜய் நடித்திருந்த கில்லி திரைப்படமும், ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News