சட்டபேரவையில் இன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அதன் மீதான விவாதத்திற்கு முன்பு மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கபட்டது.
அதில் எதிர் கட்சி தலைவராக இருந்து மறைந்த விஜயகாந்திற்கு சட்டபேரவை தலைவர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசிக்கும் போது, தேமுதிக தலைவராகவும், எதிர் கட்சி தலைவராகவும், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும், திரம்பட செயலாற்றி மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கபட்டவர் விஜயகாந்த். அவருடைய மறைவை கேட்டு துயரமடைந்ததாகவும், அவரின் மறைவால் வாடும் அவரின் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள், நடிகர்கள் அனைவருக்கும் இந்த சட்டபேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறி இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தபட்டது.