நன்றி மறக்காத தளபதி.. விஜயகாந்த் மகனுக்கு செய்யும் உதவி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவருடைய திரைப்படங்கள் வெளியாகினாலே, அன்றைய தினம் திரையரங்குகள் கொண்டாட்டமாக தான் இருக்கும். என்னதான், தற்போது பெரிய நடிகராக இருந்தாலும், இவர் ஆரம்ப காலங்களில் பல்வேறு சறுக்கல்களை சந்தித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் பல்வேறு தோல்விப் படங்களை கொடுத்த விஜய், தனது தந்தை முயற்சியின் மூலம், விஜயகாந்த் உடன், சொந்தூரப்பாண்டி என்ற படத்தில் நடித்து, மக்கள் மத்தியில் ஓரளவுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

அதன்பிறகு தான், அவருக்கு பூவே உனக்காக, ஒன்ஸ் மோர், லவ் டுடே என்று தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு தனது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த விஜயகாந்தின் மீது, நடிகர் விஜய் எப்போதும் தனி மரியாதை வைத்துள்ளார்.

ஆனால், என்னதான் விஜயகாந்தின் மீது விஜய் மரியாதை வைத்திருந்தாலும், நன்றி மறந்த விஜய் என்று ஒருசில காலங்களுக்கு முன்பு, நெட்டிசன்களால் விஜய் தாருமாறாக விமர்சிக்கப்பட்டார்.

இதற்கு காரணம் என்னவென்றால், நடிகர் விஜய் வளர்ச்சி அடைய முடியாமல் திணறியபோது, விஜயகாந்த் உதவி செய்தார். அதேபோல், தற்போது விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் தற்போது சினிமாவில் வளர முடியாமல் தவித்து வருகிறார். ஆனால், விஜய் எந்தவொரு உதவியும் செய்யவில்லை என்று பலரும் விமர்சித்து வந்தார்கள்.

ஆனால், விஜயை அன்று கடுமையாக விமர்சித்த நெட்டிசன்களின் முகத்தில் கரியை பூசும் வகையில், தற்போது விஜய் செய்த காரியம் அமைந்துள்ளது. அதாவது, விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் தற்போது, படைத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசரை, உங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட முடியுமா என்று விஜயிடம் படக்குழுவினர் கேட்டுள்ளனர். அதற்கு, படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்று சொல்லுங்கள், நானே நேரடியாக கலந்துக் கொள்கிறேன் என்று விஜய் கூறிவிட்டாராம்.

இதனைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதற்கான பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்களாம். இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்களும், தங்களது தளபதியின் நன்றி விசுவாசத்தை மெய்மறந்து பாராட்டி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News