நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக நேற்று அறிவித்தார். விஜய் கட்சி தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி தனது எக்ஸ் தளத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, “திரை உலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள்பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். வாழ்த்துக்கள் சகோதரா” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.