வாரிசு படமும், துணிவு படமும், பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கிடக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய், ரசிகர்களை தனது பனையூர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் அழைத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ரசிகர்களின் கூட்டத்தை பார்த்த திரையுலகினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய்க்கு இவ்வளவு மாஸ் உள்ளதா என்றும் வாயடைத்து போயுள்ளனர். மேலும், இது விஜய்க்கான மறைமுக எச்சரிக்கை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால், லாக்டவுன் காரணமாக, 2 வருடங்களாக ரசிகர்களை பார்க்க முடியாததால் தான், விஜய் தற்போது ரசிகர்களை பார்த்துள்ளார் என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.