இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த படத்திற்கு பிறகு, சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட ஒருசில வெற்றிப் படங்களை கொடுத்த இவர், தற்போது ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீஸான இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் ஆண்டனி, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் திரு.புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று தெரிவித்துள்ளார்.