துணிவு படம் வெளியாகி, கிட்டதட்ட ஒரு வருடங்கள் ஆகியும், அஜித்தின் அடுத்த திரைப்படமான விடாமுயற்சியின் படப்பிடிப்பு கூட முடியாமல் உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள், சற்று கவலையில் தான் இருந்து வருகின்றனர்.
ஆமை வேகத்தில் செல்லும், இப்படத்தின் படப்பிடிப்பால், ரசிகர்கள் மட்டுமின்றி, தயாரிப்பு தரப்பும், சற்று அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, படக்குழுவினர் சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்தனர்.
அங்கு ஷீட்டிங்கை நடத்திய அவர்கள், திடீரென சென்னைக்கு திரும்பிவிட்டனர். இதற்கு காரணம் என்னவென்றால், படத்தின் பட்ஜெட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.
இதனால் படத்தின் மீதமுள்ள காட்சிகளை, சென்னையில் செட் அமைத்து எடுக்க, முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
அஜித்தின் படத்திற்கே பட்ஜெட் பிரச்சனை ஏற்படும் அளவிற்கு, முன்திட்டமிடல் இல்லாமல், இயக்குநர் செயல்படுவது இதன்மூலம் தெளிவாகியுள்ளது.