இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பல்வேறு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது நடிகர் சூரியை வைத்து, விடுதலை 2-வை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு, வாடிவாசல் படத்தை, வெற்றிமாறன் இயக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, அவர் வேறொரு படத்தை ஆரம்பிக்க உள்ளாராம்.
அதாவது, வடசென்னை படத்தில் இடம்பெற்ற ராஜன் கதாபாத்திரத்தின் சிறுவயது காலத்தை, திரைப்படமாக எடுக்க உள்ளாராம். இந்த படத்தில், நடிகர் கருணாஸின் மகன் கென் நடிக்க உள்ளாராம்.
வெற்றிமாறனுக்காக மிகப்பெரிய நடிகர்கள் காத்திருக்கும் நிலையில், தொடர்ச்சியாக சிறிய நடிகர்களுடன் அவர் பணிபுரிய இருப்பது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.