அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே குவாகம் கிராம பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விசிக கொடிக்கம்பமும் உள்ளது. இந்நிலையில், விசிக கொடி கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த கொடியை மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளனர்.
இதை அறிந்த விசிக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கூவாகம் கடைவீதியில் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினர். கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த குவாகம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து நிர்வாகிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.