பொங்கல் பண்டிகையையொட்டி வாரிசு படம் வெளியாக உள்ளது. தெலுங்கு ஆடியன்சையும் டார்கெட் செய்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், பெரும் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது, சங்கராந்தி பண்டிகையையொட்டி, ஆந்திராவில் வெளியாக உள்ள நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதனால், வாரிசு படத்தின் வசூல் பாதிக்கபடுமாம். இந்த கோரிக்கையை, கடந்த 2019-ஆம் ஆண்டு, முதன் முதலில் கொண்டு வந்தவர் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் karma is a boomerang-ஆ.. என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.