அடுத்த வருடத்தின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்று வாரிசு. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி வியாபாரம் செய்துள்ளதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இதில், எது உண்மை? எது பொய் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், வாரிசு திரைப்படம் குறித்து பிரபல திரையரங்க உரிமையாளர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், எந்த விநியோகஸ்தர் வாரிசு படத்தை வாங்கியுள்ளார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, அந்த மாவட்டத்தில், வாரிசு படத்தை இதுவரை யாரும் வாங்கவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது.